உருளை பேக்

தேவையானப் பொருட்கள்:

உருளைக்கிழங்கு பெரியது - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
ஒமம் (பொடி செய்தது) - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, நீளவாக்கில் 8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முள்கரண்டியால், உருளைக்கிழங்கு துண்டுகளை குத்தி விடவும். அதன் மேல் மிளகாய்த்தூள், ஒமத்தூள், உப்பு, எண்ணை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசரி விடவும்.
பேக்கிங் டிரேயில், பிசரியத்துண்டுகளை தனித்தனியாக அடுக்கி 425 டிகிரி F இல் 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.