தேவையானப் பொருட்கள்:பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 2 கப்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:எள்ளை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பச்சைமிளகாயை நான்காக நீளவாக்கில் கீறிப் போடவும். சிறிது வதக்கி, அதில் பீன்ஸைச் சேர்க்கவும். ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி மூடி வைத்து, நிதானமான தீயில் வேக விடவும். காய் வெந்ததும், உப்பு, எள்ளுப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.