கத்திரிக்காய் கசகசா கறி

தேவையானப் பொருட்கள்:

கத்திரிக்காய் பெரியது - 4
கசகசா - 1/4 கப்
பச்சைமிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 1 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை:

கத்திரிக்காயை நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கசகசாவை, வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்ததும், சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து சிறிது வறுத்து கத்திரிக்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, கசகசாப்பொடி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கப் தண்ணீர் விடவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாகக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, காய் நன்றாக வெந்து, எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும், இறக்கி வைக்கவும்.

குறிப்பு:

சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் பரிமாறலாம். காரம் அதிகம் தேவையென்றால், பச்சைமிளகாயைக் கூட்டிக் கொள்ளலாம். அல்லது 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.