காராமணி பழப்பச்சடி
தேவையானப் பொருட்கள்:
காராமணி பயறு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பப்பாளிப்பழம் நறுக்கியது - 1 கப்
மாதுளம் பழ முத்துக்கள் - 1 கப்
சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப்
ஆப்பிள் பழத்துண்டுகள் - 1/2 கப்
செய்முறை:
காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். குழையவிடக்கூடாது. சுண்டலுக்கு வேக வைப்பதுபோல் வேகவைத்து, தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். பின்னர் அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து காராமணியும் வெல்லமும் ஒன்றாகச் சேரும் வரை கிளறி ஆற விடவும்.
ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தேனை ஊற்றி, அத்துடன் வெல்ல காராமணியையும் போட்டு நன்றாகக் கலந்து குளிர்பதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்திருந்து பரிமாறலாம்.
குறிப்பு:
பழக்கலவையில் தங்களுக்கு விருப்பமான அனைத்துப் பழங்களையும் அல்லது அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சேர்க்கலாம். விருந்து போன்ற சமையங்களில் பரிமாற ஏற்றது.
கமலா காராமணி பழப்பச்சடி ரொம்ப நல்ல இருக்கு பார்க்கவே.
பதிலளிநீக்குநான் சுண்டல், சர்க்கரை சேர்த்து இனிப்பு சுண்டல், புளிகுழம்பு இப்படி செய்துண்டு.
ஜலீலா - பழங்கள் சேர்ப்பதால் இதில் சத்தும் அதிகம். செய்து பாருங்கள்.
பதிலளிநீக்கு