உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறி
தேவையானப் பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தோல் சீவி, நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும், பெரியதாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு, கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விடவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேகவிடவும். கிழங்கு நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு:
இதை மைக்ரோ ஓவனிலும் செய்யலாம். மைக்ரோ ஓவன் பாத்திரத்தில் மேற்கூறிய எல்லாவற்றையும் ( தேங்காய்ப்பாலைத் தவிர ) போட்டு 4 அல்லது 5 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைக்கவும். பின் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Good Recipe. Thanks
பதிலளிநீக்குVery nice recipe
பதிலளிநீக்கு