கறிவேப்பிலை பொட்டுக்கடலைச் சட்னி


தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, மிளகாய், இஞ்சி, புளி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, எண்ணை சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுத்து, சட்னியின் மேல் கொட்டிக் கிளறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.