பூண்டு



பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு (உணர்வைத் தூண்டுவதால், சில மதங்களில், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்று கட்டுபாடு உண்டு), மற்றும் இதன் வாடையினால், சிலர் இதை உண்பதில்லை.

உங்களுக்கு எந்த விதமான் கட்டுபாடோ அல்லது பூண்டின் மீது வெறுப்போ இல்லையென்றால், தினமும் தவறாது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், பல கொடிய நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.

"வருமுன் காப்போம்".

செய்து பாருங்கள்: தக்காளி பூண்டு குழம்பு

5 கருத்துகள்:

  1. //ஆனால், மதக்கட்டுப்பாடு (உணர்வைத் தூண்டுவதால், சில மதங்களில், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்று கட்டுபாடு உண்டு), மற்றும் இதன் வாடையினால், சிலர் இதை உண்பதில்லை. //


    இஸ்லாம் இதைப்பற்றி என்ன கூறுகின்றது என்றால், அரேபியாவில் பச்சையாக பூண்டையும், வெங்காயத்தையும் சாப்பிடுபவர்கள் அனேகர் உண்டு (இன்னால் வரையும்). அப்படி பச்சையாக சாப்பிட்டுவிட்டு பலர் கூடும் இடங்களில் இவர்களும் கூடி அதன் பொருட்டு இவர்களின் வாயிலிருந்து வரும் அந்த வாடை மற்றவர்களுக்கு கடுமையான தொந்தரவு கொடுக்கும் என்பதனால், எங்களின் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற மக்கள் கூடும் இடங்களில் (தொழுகை போன்றவை) இவ்வகை உணவுகளை சாப்பிட்டுவிட்டு வராதீர்கள் என தடுத்துள்ளனர். அதனால் இதை உண்பதற்கு எந்தவித தடையும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா27 மே, 2008 அன்று 5:50 PM

    பயனுள்ள பதிவு :)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28 மே, 2008 அன்று 10:28 AM

    அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு, அருமையான கொள்கை. ஜைனம், புத்தம் போன்ற மதங்களில் பூண்டு சாப்பிடுவதற்குக் கட்டுப்பாடு உண்டு. இந்து மதத்திலும், ஒரு பிரிவினர் பூண்டு உண்பதில்லை. மற்ற மதங்களைப்பற்றித் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. HI kamala i am sonu (BBA).. oru kudumba ponnu na athukku example neenga dhan naan solluven.... ennama kolam poduringa supera samakiringa ungalukku enna age akuthu?? simply your really really really great .... i like u r samayal ....chance illa neengaaaaaaaa

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.