முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.
முடக்கத்தான் கீரை தோசை
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசைமாவுடன் (ஒரு பெரிய கிண்ணம் அளவு) கலந்து, தோசை சுட்டால், கசப்பு சிறிதும் தெரியாது.
நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
Hi kamala,
பதிலளிநீக்குI enjoyed visiting ur blog. I am intrigued by the "mudakkanthan kirai". I live in Southern california. Can u help me with the english/botanical name for it and also where I can buy this? I wud like to try growing it in my garden. I greatly appreciate ur help with this. thanx.
Also I will keep u posted on the Vangi baath. I am going to try it today with my home grown eggplant. It is very inspiring with good pictures. Thanx for the recipe.
Hi,
பதிலளிநீக்குThank you for visiting my site.
Mudakathan Keerai in Tamil is known as Indravalli in Sanskrit.
Its botanical name is Cardiospermum halicababum and belongs to the soapberry family.
If you find it difficult to read/write in Tamil, you can check my recipes at www.kamalascorner.com in English.
Good information.
பதிலளிநீக்குHi Kamala,
பதிலளிநீக்குI found ur blog is very useful for world tamil community.I am (aged 68)staying with my daughter family in Sydney and growing some of our Mooligaikal like Vallarai,Karpuravalli,Thulasi,Mudakathan,Ponnakanni,Arugampul,Thiruneertrupacchilai(sweetbasil-green&purple colour),Manathakkali,Puliyaarai.I am eating everyday before Breakfast raw Mudakathan&vallarai for my Arthritis,getting good relief.wish to know about side effects in continuosly eating?
கமலா சகோதரி,
பதிலளிநீக்குமுடக்கத்தான் கீரையை நான் சூப் வைத்து குடிக்கிறேன். ஒரு கைப்பிடி கீரையை எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டு குடிப்பேன். எனக்கொன்றும் கசப்பாக தெரியவில்லை. சூப் சுவையாய் இருக்கிறது. தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இதைதான் குடிக்கிறேன். இது வரை வராத மூட்டு வலி இனியும் வராது என்று நம்புகிறேன் சகோதரி.
முடகத்தான் கீரை பவுடா், பச்சை கீரை ஆன்லைனில் வாங்க
பதிலளிநீக்குhttps://www.payumoney.com/store/product/21a263aa3356ce5b22eaf9f5f4fbdc01
you are doing great service g.parthasarathy
பதிலளிநீக்கு