முட்டைக்கோஸ் பட்டாணி மிளகு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது - 1 பெரிய கிண்ணம்
பச்சைப்பட்டாணி - 1/2 கப்
புளி சாறு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
வறுத்தரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
தாளிக்க:
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பயத்தம் பருப்புடன் மஞ்சள்த்தூளைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நீள்வாக்கில் கீறிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, மிளகு தேங்காய் ஆகியவற்றை வறுத்தெடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வத்ங்கியவுடன் அதில் பச்சைப் பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அத்துடன் கோஸ் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். வாணலியை மூடி வைத்து வேக விடவும். கோஸ் வெந்ததும் புளிச்சாற்றையும், வெந்தப் பருப்பையும் போட்டு நன்றாகக் கிளறி விட்டு மீண்டும் ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
சூடன சாத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Super Super Super!!!!!!
பதிலளிநீக்குபாராட்டிற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குகமலா மேடம்,
பதிலளிநீக்குநல்லா இருக்கும் போல இருக்கே.
இன்னிக்கே பெண்டாட்டியை அரிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.
ரவிஷங்கர்,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இந்தக்கூட்டில் புளி மற்றும் மிளகு சேர்ப்பதால் சுவையாக இருக்கும்.
After a long gap mam i am visiting u again. Tomorrow i am going to do this. Advance diwali wishes mam.
பதிலளிநீக்கு