பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2
செய்முறை:
பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது).
செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன், அதில் வேக வைத்த பருப்பைக் கொட்டிக் கிளறி விட்டு மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் கடுகு, பொடியான நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
நன்றிகள்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
பதிவிட்ட அடுத்த நொடியே தங்களின் பின்னூட்டைத்தைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநாங்கள் பயத்தம் பருப்புடனேயே காயை வேக வைத்து செய்வோம். இது வித்தியாசமான செய்முறையாக இருக்கிறது, சாம்பார் பொடி சேர்ப்பதும். செய்து பார்க்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குஎத்தனை முறை செய்திருப்பினும், அடுத்தவர் சொல்லி செயல்முறை கேட்பது என்பதே சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவெங்காயம் சேர்ப்பது புதிதான செய்தி. அடுத்தமுறை செய்து பார்க்கவேண்டும்.
அன்புடன்,
ஷக்திப்ரபா
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. காய்கறிகளை நீண்ட நேரம் வேகவிடும் பொழுது அதன் சத்தும், சுவையும் குறைந்து விடும். பருப்பு வேகும் நேரம் காய் வேக தேவையான நேரத்தை விட அதிகம். அதனால் காய்கறிகளை தனியாக வேக வைப்பது நன்று.
பதிலளிநீக்குஷக்திப்ரபா,
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள். எத்தனை முறை சமைத்தாலும், வேறொருவர் சொல்லி வித்தியாசமாய் செய்து பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதான். வருகைக்கு மிக்க நன்றி.