பூண்டு மிளகாய் பொடி
தேவையானப்பொருட்கள்:
பூண்டுப்பற்கள் - 10 முதல் 15 வரை
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பருப்பு மற்றும் மிளகாயை, தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பூண்டுப்பறகளை (தோலுரித்து விட்டு) போட்டு சற்று வதக்கி எடுக்கவும். வறுத்த பருப்பு,மிளகாய் சற்று ஆறியதும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுக்குமுன் பூண்டைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அல்லது பருப்பு, மிளகாயை மட்டும் பொடி செய்து கொண்டு அதில் பூண்டை இடித்துப் போட்டுக் கிளறவும்.
இந்தப்பொடியுடன் சிறிது நல்லெண்ணைச் சேர்த்து, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு: இந்த மிளகாய் பொடியை பருப்பு இல்லாமலும் செய்யலாம். வெறும் மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடித்து அத்துடன் பூணடை இடித்துப் போட்டால், சுவை கூடுதலாக இருக்கும். ஆனால் காரம் அதிகமாக இருக்கும்.
மிளகாய் பொடி நினைத்தாலே நாவெல்லாம் சுள் சுள் !
பதிலளிநீக்குவெரி வெரி டேஸ்டி டேஸ்டி !
கோவி.கண்ணன் அவர்களே, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதம்.படிக்கும் போதே வாசனை தெரிகிறது.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. சமையற்குறிப்புகள் செய்து பார்ப்பதற்கு மட்டுமல்ல. படித்து பார்த்தாலும் மனதில் அதன் சுவை தோன்றவேண்டும்.
பதிலளிநீக்கு