பீன்ஸ் பொரியல்
தேவையானப்பொருட்கள்:
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பீன்ஸை இரு புற காமபைக் கிள்ளி விட்டு குறுக்கே இரண்டாக வெட்டி, பின்னர் ஒவ்வொரு துண்டையும் நீள வாக்கில் நான்காக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். உளுத்தம் பருப்பு சிவக்கும் வரை வறுத்து அதில் பீன்ஸ் துண்டுகளைச் சேர்க்கவும். அத்துடன் சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். பீன்ஸ் வெந்ததும் அதில் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். ஓரிரு நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.