இஞ்சி சாதம்
தேவையானப்பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 2 பெரிய துண்டு
நெய் - 6 முதல் 8 டீஸ்பூன் வரை
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 10
குங்குமப்பூ அல்லது கேசரி பவுடர் - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியைக் கழுவி நீரில் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீரை விட்டு அதில் இஞ்சியையும், ஏலக்காயையும் நன்றாகத் தட்டிப் போட்டுக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு பாதியாக குறையும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். பின்னர் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். (வடிகட்டிய நீர் 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்).
ஒரு குக்கரில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைச் சேர்த்து சற்று வறுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். ஊறவைத்துள்ள அரிசியிலிருந்து தண்ணீரை வடிகட்டி விட்டு, வெங்காயத்துடன் சேர்த்துக் கிளறி விடவும். அதில் வடிகட்டி வைத்துள்ள இஞ்சி நீரை சேர்க்கவும். குங்குமப்பூ அல்லது கேசரி பவுடரை சிறிது பாலில் கலந்து ஊற்றவும். உப்பு போட்டு கிளறி மூடி, 2 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும். குக்கர் ஆறியதும், மூடியைத் திறந்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கிளறி விடவும்.
காரமான குருமாவுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.
கமலா இது பிள்ளைகளுக்கு சளி நேரத்தில் இஞ்சி சாறு கொடுப்பேன், தினம் இங்கு குளிர் நேரத்தில் இஞ்சி தான் அதிகமாக சேர்த்து கொள்வோம், தினம் குடிக்கும் டீயிலும் இஞ்சி தான் , இஞ்சி சாதம் நல்ல புது விதமா இருக்கு. செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜலீலா. இஞ்சி சாதம், அதிக மசாலாப் பொருட்கள் எதுவுமில்லாமல் சுவையாகவே இருக்கும்.
பதிலளிநீக்குhi kamala.it is very nice blog.. actually i am doing a microsite http://www.eatwell.in.i need information about food ,recipes.so i got lot of information and more recipes from u r blog.
பதிலளிநீக்கு