பாகற்காய் சிப்ஸ்


தேவையானப்பொருட்கள்:

பாகற்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் (பொடி செய்தது) - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை கழுவி விட்டு, நீளவாக்கில் மெல்லியத் துண்டுகளாக சீவிக்கொள்ளவும். காய் மிகவும் நீளமாக இருந்தால், இரண்டாக வெட்டி, பின்னர் மெல்லிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். விதைகளை நீக்கத் தேவையில்லை. மிகவும் முற்றிய விதையாயிருந்தால் மட்டும் நீக்கவும்.

பாகற்காய் துண்டுகளை ஒரு தட்டில் போட்டு, அதன் மேல் மேற்கூறிய (பொரிப்பதற்கான எண்ணையைத்தவிர) அனைத்துப் பொருட்களையும் அதன் மேல் ஒவ்வொன்றாகத் தூவி, கடைசியில் எல்லாவற்றையும் கவனமாகப் பிசறி விட்டு, காயின் மேல் அனைத்துப் பொருட்களும் நன்றாக ஒட்டிக் கொள்ளுமாறு செய்து, ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், பாகற்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, எண்ணையில் போடவும். காய் நன்றாக மொரு மொருவென்று சிவக்க வறுபட்டவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.