சேமியா கேசரி


தேவையானப்பொருட்கள்:

சேமியா - 1 கிண்ணம்
சர்க்கரை - 3/4 கிண்ணம்
தண்ணீர் - 2 கிண்ணம்
நெய் - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
காய்ந்த திராட்சை - சிறிது
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து, அதில் சேமியாயாவைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் தண்ணீரை கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவைப் போட்டுக் கிளறி விடவும். சேமியா நன்றாக வெந்ததும் அத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் கேசரி பவுடரை சிறிது நீரிலோ அல்லது பாலிலோ கரைத்து கேசரியில் ஊற்றிக் கிளறவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் கேசரியில் போட்டு, மீண்டுமொருமுறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

குறிப்பு: சேமியாவில் சர்க்கரைச் சேர்த்த பிறகு கேசரியை நீண்ட நேரம் அடுப்பில் வைத்துக் கிளறக்கூடாது. அப்படி செய்தால், சர்க்கரை பாகாகி, சேமியா "நறுக்கு" தட்டி விடும். மெல்லிய ரக சேமியாவாக இருந்தால், தண்ணீரைச் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.

7 கருத்துகள்:

  1. பரிந்துரையில மார்க் போட்டாச்சு மேடம்.

    www.tamilish.com, www.thamilveli.com லயும் சேருங்க. இன்னும் நிறைய ஹிட்ஸ் வரும்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி செந்தழல் ரவி அவர்களே. தமிழ்வெளி திரட்டியில் ஏற்கனவே இணைத்துள்ளேன். தமிலிஷ் தான் சற்று சிரமமாக இருக்கிறது. அது தானாக திரட்டுவதில்லை. நாமாக சேர்க்க வேண்டியுள்ளதே. அதுதான். எனினும் சேமியா கேசரியைச் சேர்த்து விட்ட்டேன். ஆலோசனைக்கு மீண்டும் ஒரு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கமலா மேடம்

    எனக்கு ஜாஸ்தி ஸ்வீட் பிடிக்காது.....இருந்தாலும், இந்த முந்திரி, நெய் ததும்பும் சேமியா கேசரிய பாத்தா உடனே.......... ஐயோ.... யாராவது சூட, ஒரு கப் கொண்டு வந்து குடுக்கா மாட்டாங்களான்னு தோணறது........

    நான் இப்போ இருக்கறது துபாயில்... இங்கு சரவணா பவன்-ல கூட வாரத்துக்கு ஒரு வாட்டி தான் இந்த கேசரி கெடைக்கறது.....

    ஹ்ம்ம்.... கேசரி ஜமாய்ச்சீங்களா?

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி கோபி அவர்களே. திடீரென்று விருந்தினர் வந்து விட்டால், அவசரத்திற்கு கை கொடுப்பது இந்த கேசரிதான். அடிக்கடி வீட்டில் செய்யப்படுவதும் இதுதான்.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்.. இந்த முறை உங்க வீட்டுல சேமியா கேசரியா.. சூப்பரு :-)

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி உழவன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
    http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.