ஆப்பம்
ஆப்பம் - வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் இந்த ஆப்பம்-தேங்காய்பால் சாப்பிடாத தென்னிந்தியர்களே இல்லையெனக் கூறலாம். கேரளாவில் "ஈஸ்ட்" சேர்த்து செய்வார்கள். சிலர் அரிசி கஞ்சி சேர்த்தும் இதைச் செய்வார்கள். தஞ்சை மாவட்டத்தில் செய்யப்படும் முறை இதோ:
தேவையானப்பொருட்கள்:
பச்சை அரிசி - ஒன்றரைக் கப்
புழுங்கலரிசி - ஒன்றரைக் கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்ப்பால் - 1/4 கப்
செய்முறை:
அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து, நீரை வடித்து விட்டு, மை போல் அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் புளிக்க விடவும்.
மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.
ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும். தோசைத்துணி அல்லது சமையலறைத்தாளில் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி (ஒரு துணியால் பிடித்துக் கொண்டுதான்) ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும். ஓரிரு நிடங்களில் ஆப்பம் வெந்து விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து (ஆப்பசட்டியை விரைவாகவும், சரியாகவும் சுற்றினால் அப்பம் ஓரத்தில் மெல்லியதாகவும், நடுவே திக்காவும் இருக்கும்) எடுத்து வைக்கவும். ஒரு கரண்டி காம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும். கையாலேயே எடுத்து விடலாம்.
ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை.
தேங்காய்பாலுடனோ அல்லது உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறியுடனோ பரிமாறலாம்.
மேற்கண்ட அளவிற்கு சுமார் 15 ஆப்பம் கிடைக்கும்.
இப்போதான் இந்த வலைத்தளத்திற்கு முதன் முதலாய் வருகிறேன்.....
பதிலளிநீக்குவந்தவுடன் என்னை வரவேற்றது இந்த அட்டகாசமான ஆப்பம்....
ஆ...ஹா.... பசி நேரமா பார்த்து வந்துட்டேனே?
இருங்க.... கொஞ்சம் டைம் எடுத்து, எல்லா குறிப்பையும் படிச்சுட்டு வரேன்....
நாங்க எல்லாம், சமையல் குறிப்பு படிக்கலாம்ல?? இல்ல........
வாருங்கள் கோபி அவர்களே. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு//நாங்க எல்லாம், சமையல் குறிப்பு படிக்கலாம்ல?? இல்ல........//
ஏனுங்க.. சமையல் செய்வது, சமையல் குறிப்பு எழுதுவது/படிப்பது எல்லாம் ஆண்கள் செய்யக்கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?? தாங்கள் தாராளமாக இங்கு வரலாம். இந்த சாப்பாட்டு விசயம் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே.
weekly once i visit your site
பதிலளிநீக்குkeep it up
Hi Harini,
பதிலளிநீக்குThank you for visiting my site.
hi i like ur kitchen. it is very useful to me.oh i missed it before.else i would have become a very good cooker.from today i will follow ur kitchen
பதிலளிநீக்குHi rajashree balaji,
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி. குறிப்புகளை செய்து பார்த்து, தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
hai.
பதிலளிநீக்குVery nice... thanks for the receipe...
hai.
பதிலளிநீக்குits very useful for me....
now only i got a married, i don't have any idea about cook. but after see the site i become a good cooker.
my heartily thanks to You and ur Website.
Really a nice blog... while cooking usually i will have certain doubts by reading this some what i am clarifying things... thank you kamala avargale....
பதிலளிநீக்குReally thanks kamala avargale.. i am the regular visitor of your blog so useful recipes your giving... usually on Sundays i will try new recipes... for the past one months i am trying ur recipes only.. so nice...
பதிலளிநீக்குThank you Udhaya.
பதிலளிநீக்குகமலாம்மா, எப்படி இருக்கீங்க?? அதிகமாக கமெண்ட் போடவோ எழுதவோ நேரம் கிட்டுவதில்லையே தவிர உங்கள் வலைதளத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.
பதிலளிநீக்குஇந்த ஆப்பத்தை வெறும் புழுங்கலரிசி கொண்டு செய்ய முடியுமா? என்னிடம் பச்சரிசி இல்லை. இங்கு கிடைக்கவும் நாளாகி விடும்!! தெரியப்படுத்தவும். நன்றி :)
அன்னு. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவெறும் புழுங்கலரிசியில் செய்தால், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும்.
Really it is good and tasty thank to kamala.
பதிலளிநீக்குMohana.J