வாழைக்காய் புளிக்கறி
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - 1
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
எண்ணை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெறும் வாணலியில், மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துப் பிழிந்து, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அத்துடன் வாழைக்காய் துண்டுகல்ளைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள, உப்பு சேர்த்து சற்று நேரம் வதக்கவும். பின்னர் அதில் புளித்தண்ணீரை ஊற்றிக் கிளறி விடவும். அத்துடன் மேலும் அதில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வேக விடவும். காய் வெந்து, தண்ணீர் சுண்டியவுடன், பொடித்து வைத்துள்ள மிளகாய் பொடியைத் தூவிக் கிளறி விடவும். காயில் மசாலாத்தூள் நன்றாகச் சேர்ந்து வதங்கியவுடன், இறக்கி வைக்கவும்.
super super
பதிலளிநீக்கு