அவரைக்காய் துவட்டல்
தேவையானப்பொருட்கள்:
அவரைக்காய் - 10 முதல் 15 வரை
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
பச்சை அரிசி - 2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
அவரைக்காயை நன்றாகக் கழுவி, காம்பு மற்றும் அதன் மேலுள்ள நாரை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வெறும் வாணலியில், அரிசி, மிளகாய் இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து, ஆறிய பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன் அவரைக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மூடி வைத்து வேக விடவும். காய் நன்றாக வெந்து, தண்ணீரில்லாமல் சுண்டியவுடன், பொடித்து வைத்துள்ள மிளகாய் பொடியைத் தூவிக் கிளறி விடவும். இறக்கி வைக்குமுன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.