கேழ்வரகு அடை
தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து, கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் கொட்டவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து பிசையவும். மாவு சப்பாத்தி மாவை விட சற்று தளர இருக்க வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் வைக்கவும். , கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வட்டமாக அடையைத் தட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். (மூடி போட்டு வேக வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும்). ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேக விட்டு எடுக்கவும்.
இந்த அடைக்குத் தொட்டுக் கொள்ள பசலைக்கீரை சட்னி, புதினா சட்னி , கறிவேப்பிலை பொட்டுக்கடலைச் சட்னி ஆகியவை பொருத்தமாயிருக்கும்.
கேழ்வரகு இனிப்பு அடைக்கு இங்கே சொடுக்கவும்.
கமலா இதில் வேர்கடலை சேர்வதால் கூடுதல் ருசி கிடைக்கும் இல்லையா?
பதிலளிநீக்குஆம் ஜலீலா. ருசி கூடுதலோடு, சாப்பிடும் பொழுது அடையில் ஆங்காங்கே தட்டுப்படும் வேர்க்கடலைப் பருப்பும் சுவையைக் கொடுக்கும்.
பதிலளிநீக்குசரி செய்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குnaan accidently aaka thann intha website parthen today i will try this receipe
பதிலளிநீக்குWelcome to my blog Lakshmi. Try this recipe and let me know your feedback.
பதிலளிநீக்குகேழ்வரகு மாவு அடை ரெசிபியை படித்ததும் இன்றே டிபனுக்கு செய்துபார்த்தேன்
பதிலளிநீக்குருசியாக இருந்தது. தோசைக்கல்லில் இட்டு
தட்டும் போது லேசாக விரிசல் விழு\ந்தது. பின்னர் உடைந்துபோனது. எதனால்?