- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
பசலைக்கீரை சட்னி
தேவையானப்பொருட்கள்:
பசலைக்கீரை - 10 முதல் 15 இலைகள்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் பசலைக்கீரையைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி ஆறவிடவும். அத்துடன் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
அப்ப இன்னிக்கு எங்க வீட்டுல பசலைக்கீரை சட்னிதான் :-)
வருகைக்கு மிக்க நன்றி உழவன் அவர்களே. கேழ்வரகு அடையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
நல்ல ஹெல்தி வெஜ் சட்ணி. நான் இதுவரை செய்ததில்லை செய்து பார்த்து சொல்கிறேன்.
கருத்துரையிடுக