முள்ளங்கி சட்னி
தேவையானப்பொருட்கள்:
முள்ளங்கி - 2
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
புளி - ஒரு நெல்லிக்காயளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பருப்பு வறுபட்டவுடன் அதில் பச்சை மிளகாயைக் கீறி போடவும், புளியையும் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் முள்ளங்கித் துண்டுகளைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். கடைசியில் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித்தழையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
சீரணத்திற்கு உதவும் சட்னி இது.
கமலாவின் சமையல் குறிப்புக்கு நான் அடிமை.
பதிலளிநீக்குஎல்லா சமையல் குறிப்பும் அருமை.
வருகைக்கும், தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே.
பதிலளிநீக்கு