கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

பச்சை கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 2
புளி - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கலாம்.

நல்ல வாசனையோடு இருக்கும். இட்லி, தோசை மட்டுமின்றி, தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.

1 கருத்து:

  1. கூகிள் தேடலில் உங்களது கொத்துமல்லி சட்னி படம் மட்டுமே சிறப்பாக வந்துள்ளது.இதனை எனது பதிவுக்கு உபயோகிப்பதோடு உங்கள் தளத்திற்கு இணைப்பும் கொடுக்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.