கேழ்வரகு அல்வா


தேவையானப்பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 முதல் 1 - 1/2 கப் வரை
பால் கோவா அல்லது பால் பவுடர் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5

செய்முறை:

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் கேழ்வரகு மாவைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாகக் கிளறி விடவும்.

அல்வா சற்று கெட்டியாக ஆரம்பித்ததும் அத்துடன் பால் கோவாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவியக் கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.