பச்சை காய்கறி மசாலா
தேவையானப்பொருட்கள்:
கத்திரிக்காய் (பச்சை நிறமுள்ளது) - 2 அல்லது 3
அவரைக்காய் - 4 முதல் 5 வரை
பீன்ஸ் - 5 அல்லது 6
குடமிளகாய் (பச்சை நிறமுள்ளது) - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெண்டைக்காய் - 3 அல்லது 4
வெங்காயம் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைக்க:
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கொத்துமல்லித்தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
எல்லா காய்களையும் 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்திப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெண்டைக்காயைத் தவிர மற்ற காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீரை விட்டு வேக விடவும். காய் அரை வேக்காடு வெந்தால் போதுமானது. அதிக நேரம் வேக விட வேண்டாம். காய்களின் நிறம் மாறாமல் சற்று வெந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும். தண்ணீரை தேவையான அளவு மட்டும் ஊற்றி வேக விட்டால், காயும் வெந்து, தண்ணீரும் சுண்டி விடும். இதனால் காய்களின் சத்து வீணாகாது.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு, சற்று வதக்கிக் கொள்ளவும். நிறம் மாறக்கூடாது. சிறு தீயில் வைத்து வதக்கினால், காயும் வதங்கும், நிறமும் மாறாது.
(காய்களை மைக்ரோ அவனில் வேக வைத்தால், நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்).
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, தேங்காய் ஆகியவற்றை, தண்ணீர் சேர்க்காமல், சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், வெந்த காய்கள் அனைத்தையும் போட்டு, உப்பையும் சேர்க்கவும். ஓரிரு வினாடிகள் நன்றாகக் கிளறி விடவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஈரப்பசை போகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும்.
இந்த காய்கறி மசாலாவை, சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். ரொட்டித்துண்டுகளின் மத்தியில் வைத்து, சாண்ட்விட்ச் செய்தும் சாப்பிடலாம்.
கவனிக்க: ஒரே நிற காய்களை உபயோகித்தால், கறி பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கும். மற்றபடி விருப்பமான எந்த காய்களையும் சேர்த்து இதைச் செய்யலாம்.
கத்திரிக்காய் சேர்த்து செய்வது புதிதாக இருக்கே
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி. கத்திரிக்காய் மட்டுமல்ல, மேலும் பச்சை நிறமுள்ள, பயத்தம் காய், கொத்தவரங்காய், புடலங்காய், இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஒரே கறியில் பலவிதமான காய்களைச் சேர்ப்பதால் நிறைய சத்துக்கள் கிடைக்கும்.
பதிலளிநீக்குI thought there is no veriety in vegetarian food. But i changed my thought I am wondering are you a single person. I am a bachilor. Now i almost tried half of your verities. we can say this blog is a kitchen of tamil culture.
பதிலளிநீக்குI thought there is no veriety in vegetarian food. But i changed my thought I am wondering are you a single person. I am a bachilor. Now i almost tried half of your verities. we can say this blog is a kitchen of tamil culture.
பதிலளிநீக்குHi Raj,
பதிலளிநீக்குThank you for visiting my site and your comments.