அன்னாசிப்பழ பானகம்
தேவையானப்பொருட்கள்:
அன்னாசிப்பழம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும்.
பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப் பழத்துண்டுகளை பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி விடவும்.
குளிர்பதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
வெல்லம் சுக்கு எல்லாம் போட்டு பானகம் நு நைவேத்யதுக்கு செய்வோம். ரொம்ப அருமையா இருக்கும். அந்த ரகத்தில இருக்கு. செய்து பார்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.