தர்பூசணி நீர்மோர்
தேவையானப்பொருட்கள்:
தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
புதினா - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2
செய்முறை:
தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும்.
கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும்.
கவனிக்க: வெங்காயத்தின் பச்சை வாசனைப் பிடிக்காதவர்கள், அரை டீஸ்பூன் எண்ணையில் வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம்.
ஒன்ஸ்மோர்
பதிலளிநீக்குதர்பூசணி ஜூஸ்னா இன்னும் கலர் டார்க்கா இருக்குமே?ஒரு வேளை லெமன், ஆனியன் சேர்த்ததால் கலர் மாறுதோ?
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி சி.பி.செந்தில்குமார்.
பதிலளிநீக்குஇது தர்பூசணி ஜூஸ் அல்ல. இது நீர்மோர். மோரில் தர்பூசணியை சேர்த்து செய்வதால், மோர் இளஞ்சிவப்பிலும், மாறுபட்ட சுவையிலும் இருக்கும். தர்பூசணி ஜூஸ் தனியாகக் கொடுதுள்ளேன். கீழ்கண்ட லின்கில் பார்க்கவும்.
http://adupankarai.kamalascorner.com/2008/04/blog-post_19.html