ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இட்லி மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் ஓட்ஸைப் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு, தேங்காய்த்துருவல், உப்பு போட்டு, வென்னீர் விட்டு, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு நன்றாகப் பிசைந்து, சிறு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாயகன்ற ஒரு பெரிய பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது, 3 அல்லது 4 உருண்டைகளைப் போடவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, மேலும் சில உருண்டைகளைப் போடவும். உருண்டைகளைப் போட்டவுடன் கொதி அடங்கி சில நிமிடங்களில் நீர் மீண்டும் கொதிக்கத் தொடங்கும். அப்பொழுது கரண்டியால் லேசாக கிளறி விட்டு, மேலும் சில உருண்டைகளைப் போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். உருண்டைகள் வெந்ததும், பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து, அதிலிருக்கும் உருண்டைகளை ஒரு கரண்டியால் அரித்து எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், வெந்த உருணடைகளைப்போட்டு, அதன் மேல் மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவற்றைத்தூவி, நன்றாகக் கிளறி விட்டு, இறக்கி வைக்கவும்.
முதல் பந்தி முதல் விருந்தாளி
பதிலளிநீக்குவாவ்.. சுப்பர்..செய்து பார்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி சி.பி.செந்தில்குமார் மற்றும் மதுரை பொண்ணு அவர்களுக்கு.
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்கு