சீராளம்
தேவையானப்பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 அல்லது 2 சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி - 1 அல்லது 2 டீஸ்பூன்
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள பருப்பு துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இட்லி மிளகாய் பொடி மற்றும் தேங்காயைத் தூவி, சற்று பிரட்டி விட்டு எடுக்கவும்.
இது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டி.
உடனடியாக செய்யகூடிய சுவையான சிற்றுண்டி .பகிர்வுக்கு நன்றி .
பதிலளிநீக்கு