கேழ்வரகு இனிப்பு புட்டு
தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
சர்க்கரை - 1/4 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
உப்பு - ஓரிரண்டு சிட்டிகை
செய்முறை:
கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.
ஒரு சுத்தமான துணியை எடுத்து, தண்ணீரில் அலசிப் பிழிந்துக் கொள்ளவும். பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப்பதில், வெல்லத்தைப் பொடித்தும் சேர்க்கலாம்.
மிக அருமை.
பதிலளிநீக்குஇத்துடன் இதன் சத்துக்களை பற்றியும் விளக்கியிருக்கலாமே
மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்
பதிலளிநீக்குஇந்த விளக்கம் ரொம்ப யதார்த்தம் +அழகு
நன்றி பூங்குழலி.
பதிலளிநீக்குவெங்கடேச குருக்கள் அவர்களே,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதன் சத்துக்கள் பற்றிய கட்டுரை இங்கே உள்ளது.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3160
பழைமையான, சுவையான ராகிப்புட்டு! புகைப்படம் மிக அழகு!
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன். என் அபிமான படைப்பாளிகளில் தாங்களும் ஒருவர். தங்களிடமிருந்து பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமை. நல்ல ரெசிபி. நன்றி. தங்கள் படைப்பு லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பலாம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு