பிரட் கிரிஸ்பி


தேவையானப்பொருட்கள்:

ரொட்டித்துண்டுகள் - 4
ரவா - 1/4 கப்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பச்சை கொத்துமல்லி - சிறிது
மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ரொட்டித்துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து இலேசாக பிசையவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றிலுள்ள சாற்றிலேயே எல்லாம் ஒன்றாகக் கலந்து விடும். தேவைப்பட்டால், சிறிது நீரைத் தெளித்து கெட்டியான பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். ரொட்டித்துண்டுகளின் மேல் ரவா பேஸ்டை நன்றாகத்தடவி, எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில், டீயுடன் பரிமாற ஏற்ற சிற்றுண்டி.

3 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.