ரவா உருண்டை


தேவையானப்பொருட்கள்:

ரவா - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் - 8
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

ரவாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுக்கவும். சிவக்க வறுக்கத் தேவையில்லை. தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தால் போதுமானது. சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் நன்றாகப் பொடித்து சலித்துக் கொள்ளவும். பொடித்த ரவாவை அளந்து, அதற்கு சமமாக சர்க்கரைத் தூளை சேர்க்க வேண்டும். அத்துடன் ஏலக்காயையும் பொடித்து சேர்க்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து, ரவாவுடன் சேர்த்து, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் 2 அல்லது 3 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் சூடான நெய்யை விட்டு, ஒரு கரண்டியால் கலந்துக் கொள்ளவும். பின்னர் மாவை ஒரு முறை கையால் கலந்து விட்டு, எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாகப் பிடிக்கவும். மீதமுள்ள மாவு , நெய் ஆகியவற்றை இப்படியே கொஞ்சம், கொஞ்சமாகக் கலந்து செய்து முடிக்கவும்.

மேற்கண்ட அளவிற்கு 20 உருண்டைகள்வரை கிடைக்கும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.