தேங்காய் பர்பி


தேவையானப்பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு, நிறம் மாறாமல், 2 அல்லது 3 வினாடிகள் வதக்கி எடுக்கவும்.

சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது பாலை ஊற்றவும். சர்க்கரையிலுள்ள அழுக்கெல்லாம் நுரைத்து வரும். அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டியில் ஊற்றி, நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சர்க்கரை பாகை அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தேங்காய்த்துருவல், சர்க்கரை எல்லாம் நன்றாகக் கலந்து கெட்டியாகும் வரை, அடிக்கடி கிளறி விடவும். சற்று கெட்டியானதும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.

கவனிக்க:

பர்பி மிகவும் கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்கக் கூடாது. சற்று சேர்ந்தாற்போல் வந்தவுடன் இறக்கி விடலாம். நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருந்தால், துண்டு போட வராது. உதிர்ந்து விடும்.

தேங்காயைத் துருவும் பொழுது, அழுத்தித் துருவாமல், மேலாகத் துருவ வேண்டும். அப்பொழுதுதான் தேங்காய்ப்பூ வெள்ளையாக இருக்கும். மூடியின் அடியிலிருக்கும் தேங்காயை, சட்னி செய்ய அல்லது வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேங்காய் துருவலும் வெள்ளையாயிருந்து, சர்க்கரை பாகையும் வடிகட்டி செய்தால், பர்பி வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

3 கருத்துகள்:

  1. அருமை! படத்தைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. ஆனால் நான் சாப்பிட முடியாது. (Diabetic)
    பகிர்விற்கு நன்றி சகோதரி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    பதிலளிநீக்கு
  2. im just a beginner... so if u cud mention the timings..like how long we must have em on the stove...it wil be much more useful!!!
    Thanks

    பதிலளிநீக்கு
  3. ayyo sollum pothe ippave saptanumnu thonuthu nan inimel than seithu sappitanum thanks

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.