கார துக்கடா



தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணை, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "துக்கடாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இனிப்பு துக்கடா குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.

2 கருத்துகள்:

  1. துக்கடாக்கள் பிரமாதம். படங்கள் அசத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமை! படத்தைப் பார்த்தாலே பசிக்கிறது!
    பகிர்விற்கு நன்றி சகோதரி!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.