தக்காளி பச்சடி


தேவையானப் பொருட்கள்:

தக்காளி (நடுத்தர அளவு) - 2
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள தேங்காய், மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். குழைய வேண்டாம், சற்று வெந்தாலே போதும். அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து ஆற விடவும்.

தயிருடன் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கடைந்துக் கொள்ளவும். அதில் ஆற வைத்துள்ள தக்காளியைப் போட்டுக் கிளறி விடவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, குளிர்பதனப் பெட்டியில் குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருந்து பரிமாறவும்.

கலந்த சாதம் மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

3 கருத்துகள்:

  1. ஓட்டலில் சாப்பிடும் தக்காளி பச்சடி போல் உள்ளதே ! செய்து பார்க்க சொல்கிறேன் ! நன்றி சகோதரி !

    பதிலளிநீக்கு
  2. திண்டுக்கல் தனபாலன்,

    சுவை நன்றாக இருக்கும். சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.