கொத்துமல்லி இட்லி


தேவையானப்பொருட்கள்:

இட்லி மாவு - ஒரு கிண்ணம் (6 இட்லி செய்யுமளவிற்கு)
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - சிறிது

அரைக்க:

பச்சை மிளகாய் - 1 அல்லது 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நறுக்கிய பச்சை கொத்துமல்லி இலை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

கொத்துமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை சிறிது ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்து, மாவில் கொட்டிக் கிளறி விட்டு, இட்லியாக சுட்டெடுக்கவும்.

2 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.