மாம்பழ பர்ஃபி


தேவையானப்பொருட்கள்:

நன்கு கனிந்த மாம்பழம் (நடுத்தர அளவு) - 1
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் பவுடர் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மாம்பழத்தின் தோலை சீவி விட்டு, துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். ஒரு நடுத்தர அளவு மாம்பழத்திற்கு ஒரு கப் விழுது கிடைக்கும்.

ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அதில் கடலை மாவைப் போட்டு வாசனை வர வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.


அதே வாணலியில் மாம்பழ விழுது, சர்க்கரை இரண்டையும் போட்டு, சற்று கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும்.


விழுது சற்று கெட்டியானவுடன், அதில் வறுத்து வைத்துள்ளக் கடலை மாவையும், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சேர்ந்து வரும் வரைக் கிளறவும்.


கடைசியில் பால் பவுடர், முந்திரிப்பருப்பு (பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்), ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு ஆற விடவும்.


நன்றாக ஆறியதும் (தட்டின் அடிபாகத்தைத் தொட்டால் சூடு இருக்கக் கூடாது) வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.

பின் குறிப்பு:  பர்ஃபி செட் ஆவதற்கு குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சென்னையிலுள்ள இன்றைய வெப்பத்திற்கு (110 டிகிரி) 2 மணி நேரத்திற்கு மேலும் சூடாகவே இருந்தது. அதனால், பர்ஃபி சற்று ஆறியவுடன், ரெபிரிஜ்ரேட்டரில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, துண்டுகள் போட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.