தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கழுவி, ஊறிய பயறுடன், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்த மாவில் வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழ அள்வு மாவை எடுத்து, இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.
சட்னி அல்லது தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வடை சற்று காரமாக வேண்டுமெனில், மாவில் மிளகு, சீரகம் பொடித்து சேர்க்கலாம்.
பெசரட்டு மாவில் வடை வித்தியாசமான ருசிகரமான பதிவு நன்றி கமலா
பதிலளிநீக்குநல்ல பகிர்வு ! நன்றி சகோதரி !
பதிலளிநீக்குவித்தியாசமா இருக்கே.. பச்சைப் பயிறு என்பதால் சத்தும் கூட.
பதிலளிநீக்கு