உருளைக்கிழங்கு பக்கோடா


தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1
வெங்காயம் (நடுத்தர அளவு) - 1
மாதுளை முத்துக்கள் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (தோலை நீக்க தேவையில்லை). வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். மாதுளம் முத்துக்கள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாகவும். எண்ணை காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 
.தக்காளி சாஸ் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.
 
இதை "பக்கோடா குருமா", "மோர் குழம்பு" ஆகியவற்றில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

கவனிக்க: இதை பொரிக்கும் பொழுது, அடுப்பிலிருந்து சற்று தள்ளி நிற்கவும். ஏனெனில், மாதுளம் முத்துக்கள் இலேசாக வெடிக்க வாய்ப்புள்ளது.  இது ஆறினால் சற்று நமத்துப் போகும். எனவே சூடாக பரிமாறவும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.