தேவையானப்பொருடகள்:
பாகற்காய் - 2 அல்லது 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 தேக்கரண்டி அல்லது சுவை படி
செய்முறை:
புளியை சிறிது நீரில் ஊறவைத்து கரைத்து புளிச்சாற்றை எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் புளிச்சாறு தேவை.
பாகற்காயை கழுவி, முனையை நீக்கி விட்டு, மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வில்லைகளை கொதிக்கும் நீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். எடுத்து, ஒரு தட்டில் போடவும். அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் பொடி, புளிச்சாறு, வெல்லம், உப்பு போட்டு பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
ஒரு தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி சூடாக்கவும். அதில் பாகற்காய் வில்லைகளை தனித்தனியாக எடுத்து பரப்பி, அதன் மேலே ஓரிரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி வேக விடவும். ஒரு புறம் நன்றாக சிவந்ததும், எல்லா வில்லைகளையும் ஒவ்வொன்றாகத் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்க வேக விடவும். இரு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தரும் சமையல் குறிப்பு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...