தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு 1 அங்குல நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (கிள்ளி போடவும்) போட்டு ஒரு வினாடி வறுக்கவும். பின்னர் அதில் வெண்டைக்காயைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும்.
குறிப்பு நல்லாருக்கு. இதையே மிளகாயைக் கிள்ளிப் போடாம பொடியைப் போட்டு செய்வோம். உங்க முறையிலும் ஒரு நாள் செஞ்சு பார்க்கணும். நன்றிங்க பகிர்வுக்கு.
பதிலளிநீக்குபடமும் விளக்கமும் நன்றாக உள்ளது. நாங்கள் செய்வதும் இதே முறைதான், சமைக்க தெரியாதவர்களுக்கு படித்து சமைக்க உங்களை போன்றவர்களின் பதிவு மிக உதவியாக இருக்கும்
பதிலளிநீக்குஅருமையா இருக்கு சகோ... நன்றி...!
பதிலளிநீக்குஎலுமிச்சை +பெருங்காயம் ,புதுசா இருக்கே ...செஞ்சு பார்த்துட்டு மறுபடி வரேன்
பதிலளிநீக்குவெண்டைக்காய் வதக்கலுக்கு எலுமிச்சை சாறு ஊற்றியது இல்லை.
பதிலளிநீக்குஇந்த முறையில் செய்துப் பார்க்க வேண்டும்.
தங்கள் அனைவரின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. இது அதிக காரமில்லாமல், புளிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும். செய்து பார்த்து விட்டு, தங்கள் கருத்தினை கூறுங்கள்.
பதிலளிநீக்குநல்ல சத்தான உணவு
பதிலளிநீக்குநன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)