தேவையானப்பொருட்கள்:
கத்திரிக்காய் - 5 முதல் 6 வரை
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில், கடலை மாவு, மிளகாய்த்தூள், த்னியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது, ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, ஓரிரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) போட்டு சற்று வதக்கி விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியில் பிசறி வைத்திருக்கும் கத்திரிக்காயைப் போட்டு கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு காய் வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ.....!
பதிலளிநீக்குவீட்டில் செய்ய சொல்ல வேண்டும்..
செய்முறை நன்றாக இருக்கிறது செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
All your receipies are really good and well explained. Very nice presentation too.
பதிலளிநீக்குThanks
very nice blog.. happy to follow..
பதிலளிநீக்குhttp://www.indiantastyfoodrecipes.com/