இடியாப்பம் எளிதில் சீரணிக்கக் கூடிய ஒரு உணவு. இது வெறும் அரிசி மாவில் செய்வதால், கூடுதல் சுவைக்காக, இதை தாளித்தும் அல்லது குருமா போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடுவார்கள். இதை "சேவை" என்றும் சொல்வார்கள். எளிதான இரண்டு "சேவை" குறிப்புகள் இதோ:
வெல்ல சேவை:
தேவையானப்பொருட்கள்:
இடியாப்பம் - ஒரு கிண்ணம்
வெல்லம் பொடித்தது - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடித்த வெல்ல நீரை மீண்டும் அடுப்பிலேற்றி ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஏலக்காய்த்தூளைத்தூவிக் கிளறி இறக்கி வைக்கவும். இடியாப்பத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் மேல் வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து விடவும். சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.
மிளகு சேவை:
தேவையானப்பொருட்கள்:
இடியாப்பம் - ஒரு கிண்ணம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
நெய் அல்லது எண்ணை - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - சிறிது
செய்முறை:
மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் நெய் அல்லது எண்ணையை விடவும். சூடானதும் முந்திரிப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து முந்திரி சிவக்கும் வரை வறுக்கவும். அதில் இடியாப்பத்தைப் போட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.
இது போல் செய்ததில்லை...
பதிலளிநீக்குநன்றி...