எள்ளு உருண்டை


தேவையானப்பொருட்கள்:

எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு,  நன்றாக வெடித்து பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 சுற்றுகள் வரை அரைக்கவும். அத்துடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் ஓட விடவும். கடைசியில் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றி எடுக்கவும். சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டைகளாக பிடிக்கவும்.

2 கருத்துகள்:

  1. குறித்துக் கொண்டார்கள்...மிக்க நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. அம்மா செய்து கொடுத்துள்ளார்கள். நன்றாக இருக்கும். அதே பக்குவத்தில் சொல்லியுள்ளீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.