திருமண விருந்துகளில் "இனிப்பு பச்சடி" கண்டிப்பாக இடம் பெறும். இது "தக்காளி", "பீட்ரூட்" அல்லது பழத்துண்டுகளை வைத்து செய்யப்படும். தக்காளி இனிப்பு பச்சடிக்கான குறிப்பு:
தேவையானப்பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 3
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சடி கொதிக்க ஆரம்பித்து, சற்று கெட்டியானவுடன், அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்ற நெய்யில் வறுத்து சேத்து, ஏலக்காய் தூளையும் தூவி கிளறி இறக்கி வைக்கவும்.
பீட்ரூட் இனிப்பு பச்சடி குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்
வீட்டில் ஒருமுறை முயற்சி செய்தார்கள்... சாஸ் போல வந்தது... இந்த முறையில் செய்து பார்க்க சொல்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குeasy methoda irunthathu .supper....
பதிலளிநீக்கு