தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
முழு உளுந்து - 1/4 கப்
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிபப்ருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியையும், உளுந்தையும், நிறம் மாறாமல், தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும்.
ஒரு குக்கரில், வறுத்த அரிசி, உளுந்து, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: புழுங்கலரிசி மற்றும் கறுப்பு உளுந்தை உபயோகித்துத்தான் இந்த சாதத்தை செய்வார்கள். இடுப்பெலும்பிற்கு வலு சேர்க்கக் கூடியது. இதைத் தாளிக்காமல், சிறிது நல்லெண்ணை சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.
படங்களுடன் மிக மிக அருமை
பதிலளிநீக்குபார்க்க அழகா இருக்கு பாராட்டுக்கள் .... போடுறதே போடுறீங்க நல்ல லெக் பீசா இருக்குற பிரியாணி படமா போடுங்க தாயே .
பதிலளிநீக்குபயனுள்ள குறிப்பு... நன்றி சகோதரி...
பதிலளிநீக்குஎங்கள் பக்கம் அடிக்கடி செய்வார்கள்.
பதிலளிநீக்குதேங்காய் துறுவலை அரிசி பருப்புடன் போட்டே செய்வோம்.
பகிர்வு அருமை. நீங்கள் சொன்ன முறையில் செய்துப்பார்க்கிறேன்.
நன்றி.