கறிவேப்பிலை பொடி

தேவையானப்பொருட்கள்: 

கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் (சிறிய அளவு)- 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, தனியா, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.  கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுக்கவும்.  சற்று ஆறியவுடன் எல்லவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, உப்பையும் சேர்த்து சற்று கொரகொரப்பாகப் பொடித்து எடுக்கவும்.
இதை சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். காய்கறி பொரியல் செய்யும் பொழுது கடைசியில் சிறிது பொடியைத்தூவினால் நல்ல வாசனையாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. மல்லி, பூண்டு, சீரகம் சேர்ப்பது புதுவிதமாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அட அருமையா இருக்கே ..கருவேப்பிலை பொடி ..

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.