தேவையானப்பொருட்கள்:
சேமியா - 1 கிண்ணம் (100 கிராம்)
பயத்தம் பருப்பு - 1/4 கப் ((50 கிராம்)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் சேமியாவைப் போட்டு சற்று
வறுத்து எடுக்கவும். (தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தால் போதும். சிவக்க
விடவேண்டாம்).
இஞ்சியை, தோலை சீவிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறிக் கொள்ளவும். மிளகையும், சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பயத்தம்
பருப்பில் சுமார் 4 கப் நீரைச் சேர்த்து அத்துடன் மஞ்சள் பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி இரண்டையும் சேர்த்து வேக விடவும். பருப்பு முக்கால் பங்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவைக் கொட்டிக் கிளறி விடவும். அத்துடன் உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, மிதமான் தீயில் வேக விடவும். சேமியா நன்றாக வெந்து, நீர் வற்றியதும், இறக்கி வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மீதமுள்ள நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும்
அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு
தாளித்து, இந்த தாளிப்பை சேமியா-பருப்பு கலவையில் கொட்டிக் கிளறவும்.
சுவையான சேமியா பொங்கல் தயார்.
தேங்காய் சட்னி அல்லது கொஸ்துடன் பரிமாறலாம்.
மேற்கண்ட அளவிற்கு 2 பேர் சாப்பிடலாம்
இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...
பதிலளிநீக்குசேமியா பொங்கல் மிக அருமை.
பதிலளிநீக்கு