- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
தேங்காய் சிவப்பு சட்னி
தேவையானப் பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - கொட்டைப்பாக்களவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம்,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சட்னி மிகவும் அருமை
செய்து பார்த்ததில் சில சந்தேகங்கள்
தனி யாக வறுக்கவும் என்று இருந்தது
அதில் தான் சிறிது குழப்பம்
விளக்கினால் நன்று
மற்றபடி அணைத்து குறிப்புகளும் நன்று
தொடர வாழ்த்துக்கள்
doitinaction@gmail .com
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
தனித்தனியாக வறுப்பதென்றால், எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு வறுக்காமல், சிறிது எண்ணை விட்டு முதலில் பெருங்காயத்தைப் பொரித்தெடுத்து விட்டு, பின் கடலைப் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைக்க வேண்டும். பின் அதே எண்ணையில் உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு பொருளாக வறுத்து எடுத்தால் ஒரே சீராக எல்லா பொருட்களும் வறுபடும். இல்லெயென்றால் சிலது கருகி விடும், சிலது வறுபடாமல் இருக்கும்.
கருத்துரையிடுக