• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பருப்பு உருண்டைக் குழம்பு


தேவையானப் பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் வெங்காயம் - 3
பெரிய வெங்காயம் - பாதி
தேங்காய் துருவல் - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவெப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும். குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன், ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.

கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...