தேவையானப்பொருட்கள்:
இன்ஸ்டன்ட் பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில், மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், இன்ஸ்டன்ட் பஜ்ஜி/போண்டா மிக்ஸைப் போட்டு, அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணையை சூடாக்கி மாவின் மேல் கொட்டிக் கலக்கவும். பின்னர் அதில் சிறிது நீரைத் தெளித்து, கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சாம்பார் சாதம்/புலாவ் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாகவும் டீயுடன் பரிமாறலாம்.
கவனிக்க: இது உடனடியாக செய்யக் கூடிய ஒரு "அவசர பக்கோடா". வழக்கமான வெங்காய பக்கோடா குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.